பாமாலை · Hymn95
மாட்சி போரை
Sing my tongue the glorious battle
1
மாட்சி போரை போரின் ஓய்வைபாடு எந்தன் உள்ளமே!மாட்சி வெற்றி சின்னம் போற்றிபாடு வெற்றி கீதமே;மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்மாண்டு பெற்றார் வெற்றியே.
2
காலம் நிறைவேற, வந்தார்தந்தை வார்த்தை மைந்தனாய்;ஞாலம் வந்தார் வானம் நீத்தேகன்னித் தயார் மைந்தனாய்வாழ்ந்தார் தெய்வ மாந்தனாகஇருள் நீக்கும் ஜோதியாய்.
3
மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்விட்டார் வீடு சேவைக்காய்!தந்தை சித்தம் நிறைவேற்றிவாழ்ந்தார்; தந்தை சுத்தமாய்சிலுவையில் தம்மை ஈந்தார்தூய இயேசு பலியாய்.