பாமாலை · Hymn120

பூரண வாழ்க்கையே

O perfect Life of Love

Projector

Lyrics

1
பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது!
2
பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்;தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார்.
3
அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே;உருகும் அவர் நெஞ்சிலும்நம் துன்பம் பாய்ந்ததே.
4
முள் தைத்த சிரசில்நம் பாவம் சுமந்தார்;நாம் தூயோராகத் தம் நெஞ்சில்நம் ஆக்கினை ஏற்றார்.
5
எத்துன்ப நாளுமே,மா நியாயத்தீர்ப்பிலும்உம் புண்ணியம், தூய மீட்பரே,எங்கள் அடைக்கலம்.
6
இன்னும் உம் கிரியையைஎங்களில் செய்திடும்;நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கேஎன் அன்பு ஈடாகும்.
120 பூரண வாழ்க்கையே — Tamil Pamalai