பாமாலை · Hymn148
ஆத்துமாக்கள் மேய்ப்பரே
Bishop of the souls of men
1
ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓனாய் போல்கிட்டிச் சேரும் நேரமும்,நாச மோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே.
2
பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவான்;காவல் இன்றிக் கிடைக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தை முன் நின்றருள்வீர்.
3
கெட்டப் போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப் போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடந்திடும்.
4
புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்யம் அருளும்