பாமாலை · Hymn316

இயேசு நாதா! காக்கிறீர்,

Jesus Saviour pilot me

Projector

Lyrics

1
இயேசு நாதா! காக்கிறீர்,இளைப்பாறச் செய்கிறீர்;மோசம் நேரிடாமலும்,பாதம் இடறாமலும்,என்னைத் தாங்கி நிற்கிறீர்,நேச நாதா! காக்கிறீர்.
2
வாரிபோன்ற லோகத்தில்யாத்திரை செய்து போகையில்சூறைக் காற்று மோதினும்ஆழி கோஷ்டமாயினும்,அமைதல் உண்டாக்குவீர்;நேச நாதா காக்கிறீர்.
3
சற்றுத் தூரம் செல்லவே,மோட்ச கரை தோன்றுமே!துன்பம் நீங்கி வாழுவேன்;இன்பம் பெற்று போற்றுவேன்;அதுமட்டும் தாங்குவீர்;நேச நாதா! காக்கிறீர்.
316 இயேசு நாதா! காக்கிறீர், — Tamil Pamalai