பாமாலை · Hymn164

ஆ பாக்கிய தெய்வ

The saints of God their conflict past

Projector

Lyrics

1
ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் நீண்ட போர் முடிந்ததே;வெற்றிகொண்டே, சர்வாயுதம்வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.
2
ஆ பாக்கிய தெய்வ பக்தரே;மா அலுப்பாம் பிரயாணத்தைமுடித்து, இனி அலைவும்சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்நல் வீட்டில் இளைப்பாறுவீர்.
3
ஆ பாக்கிய தெய்வ பக்தரே;இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;இப்போதபாய புயலும்உம்மைச் சேராது கிஞ்சித்தும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இன்பத் துறையில் தங்குவீர்.
4
ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் மேனி மண்ணில் தூங்கவே,மாண்பாய் எழும்புமளவும்விழித்துக் காத்துக்கொண்டிரும்;சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்நம் ராஜா வருவார் என்பீர்.
5
கேளும், தூயோரின் நாதரே,பரிந்து பேசும் மீட்பரே,வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,கடாட்சம் வைத்து ஆளுமே;சீர் பக்தரோடு நாங்களும்மேலோகில் சேரச் செய்திடும்.
164A ஆ பாக்கிய தெய்வ · Rest — Tamil Pamalai