பாமாலை · Hymn422
கர்த்தாவின் திருநாள் இதாம்
This is the Sabbath of the Lord
1
கர்த்தாவின் திருநாள் இதாம்விசாரம் வேலையை எல்லாம்மறந்தவர்முன் யாவரும்வந்தவரைப் பணியவும்,அல்லேலுயா.
2
புவியும் அதிலுள்ளதும்படைத்து மனிதனையும்தெய்வீக சாயலின்படிபடைத்த ஸ்வாமிக்குத் துதிஅல்லேலுயா.
3
தினமும் நம்மைப் போஷித்துஅநேகத் தீமைகளுக்குவிலக்கி காத்து வந்தாரே,அதவர் தூய அன்பாமே.அல்லேலுயா.
4
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே,நீர் எங்கள் நல் ஆன்மாவிலேநிலைத்து, எந்த நன்மைக்குன்அடியாரை உயிர்ப்பியும்,அல்லேலுயா.
5
தேவாவியே, நல்லறிவும்மெய்விசுவாசம் நேசமும்சபையில் உம் அதிசயநல் வார்த்தையாலே பெருக,அல்லேலுயா.
6
வெளிச்சந் தந்தெம் உள்ளத்தில்அன்பாகத் தங்கும்; எங்களில்எல்லாம் கர்த்தாவின் மேன்மைக்குபுகழ் பெருக்க வல்லது,அல்லேலுயா.