பாமாலை · Hymn227

வயல் உழுது தூவி

We plough the fields and scatter

Projector

Lyrics

1
வயல் உழுது தூவிநல் விதை விதைப்போம்கர்த்தாவின் கரம் அதைவிளையச் செய்யுமாம்அந்தந்தக் காலம் ஈவார்நற்பனி மழையும்சீதோஷ்ணம் வெயில் காற்றுஅறுப்புவரையும்.நல் ஈவுகள் யாவும்ஈபவர் கர்த்தரேதுதிப்போம் என்றும் துதிப்போம்அவர் மா அன்பையே.
2
விண் வானம் ஆழி பூமிஅவரே சிருஷ்டித்தார்புஷ்பாதி விண் நட்சத்திரம்பாங்காய் அமைக்கிறார்அடக்கி ஆழி காற்றுஉண்பிப்பார் பட்சிகள்போஷிப்பிப்பார் அன்றன்றும்மைந்தாராம் மாந்தர்கள்.நல் ஈவுகள் யாவும்ஈபவர் கர்த்தரேதுதிப்போம் என்றும் துதிப்போம்அவர் மா அன்பையே.
3
நல் ஈவு பலன் பாக்கியம்விதைப்பு அறுப்பைஜீவன் சுகம் ஆகாரம்தரும் பிதா உம்மைதுதிப்போம், அன்பாய் ஏற்பீர்படைக்கும் காணிக்கையாவிலும் மேலாய்க் கேட்கும்தாழ்மையாம் உள்ளத்தை.நல் ஈவுகள் யாவும்ஈபவர் கர்த்தரேதுதிப்போம் என்றும் துதிப்போம்அவர் மா அன்பையே.
227 வயல் உழுது தூவி — Tamil Pamalai