பாமாலை · Hymn231

ஆ நீதியுள்ள கர்த்தரே

Ach Herre du gerechter Gott

Projector

Lyrics

1
ஆ நீதியுள்ள கர்த்தரேவயல் வறண்டதாலேஎஜ்ஜீவனும் வதங்கிற்றே;இக்கேடு எங்களாலேநடந்த பாவத்தின் பலன்என்றெங்களில் ஒவ்வொருத்தன்துக்கித்துச் சொல்வானாக
2
ஆ எங்கள் மீறுதல்களைஇரக்கமாய் மன்னியும்நீரே அடியார் நம்பிக்கைசகாயத்தை அளியும்;கர்த்தாவே சுத்த தயவால்மழையைத் தந்து அதினால்நிலத்தைப் பூரிப்பாக்கும்
3
தயாபரா நீர் உமதுநல் வாக்கு நிறைவேறகாய்ந்து கிடைக்கும் பூமிக்குதண்ணீர் இறைப்பீராக;வானுலகாளும் கர்த்தரே,மழையை உம்மை அன்றியேஆர் பெய்யப் பண்ணக் கூடும்?
4
மூச்சற்ற விக்ரகங்களால்கூடாது தேவரீரேவானத்தைத் திருக் கரத்தால்விரித்தீர்; அதில் நீரேஅளவில்லாமல் ஆள்பவர்நீரே பிதா நீர் ரட்சகர்உம்மாலே யாவும் ஆகும்
231 ஆ நீதியுள்ள கர்த்தரே — Tamil Pamalai