பாமாலை · Hymn229

அடியார் வேண்டல் கேளும்

Not Available

Projector

Lyrics

1
அடியார் வேண்டல் கேளும், இயேசுவே!உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.
2
எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்பந்தியில் நீரும் கூட அமர்வீர்,எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.
3
பாலனாய் வந்த இயேசு ரட்சகா,எம் பாலர் முகம் பாரும், நாயகா;தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.
4
வாலிபர் நெறி தவறாமலும்,ஈனர் இழிஞரைச் சேராமலும்,ஞானமாய் வாழ்ந்து சீலமுடனேநல் சேவை செய்ய நீர் அருள்வீரே.
5
மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;நோயுற்றோர் பலவீனர் யாரையும்தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.
6
எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்றுஎங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்அன்பாய் அணைத்து ஆதரித்திடும்அவரைக் காத்து அல்லும் பகலும்.
7
ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,ஆவியில் அன்பில் என்றும் பெருக,எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்இயேசுவின் வீடாய் என்றும் பொலிக
229 அடியார் வேண்டல் கேளும் — Tamil Pamalai