பாமாலை · Hymn23

தொழுவோம் பரனை

O worship the Lord

Projector

Lyrics

1
தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்விழுவோம் அவர் முன் மாட்சி போற்றிபொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.
2
வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தைஎப்பாரம் தாங்கும் திரு உள்ளமேஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தைஜீவ பாதை காப்பார் உத்தமமாய்.
3
படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும்,அடையோமே பயம் ஆராதிக்க;சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும்அத்தனைப் பக்தியாய் பூஜித்திட.
4
பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்தயவாய் ஏற்பார் நம் காணிக்கையேமாலையின் கண்ணீர்தான், காலையில் களிப்பாம்மலைவு போம், நிற்கும் நம்பிக்கையே.
5
தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்,விழுவோம் அவர்முன் மாட்சி போற்றி;பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.
23D தொழுவோம் பரனை · Woodhouse Grove — Tamil Pamalai