பாமாலை · Hymn237
இயேசு எங்கள் மேய்ப்பர்
Jesus is our Shepherd
1
இயேசு எங்கள் மேய்ப்பர்,கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும்,இன்பம் ஆயினும்,இயேசுவின் பின் செல்வோம்பாலர் யாவரும்.
2
நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறிவோம்காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்கண்டித்தாலும், நேசர்ஆற்றித் தேற்றுவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார்.
3
ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினோரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார்;திவ்விய தூய சாயல்ஆக மாற்றுவார்.
4
இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓநாய்கள் வந்தாலும்தொடவே ஒட்டார்சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்பாதாளத்தின் மேலும்ஜெயங்கொள்ளுவோம்.