பாமாலை · Hymn243
நேர்த்தியானதனைத்தும்
All things bright and beautiful
பல்லவி
நேர்த்தியானதனைத்தும்சின்னம் பெரிதெல்லாம்ஞானம், விந்தை ஆனதும்கர்த்தாவின் படைப்பாம்.
1
பற்பல வர்ணத்தோடுமலரும் புஷ்பமும்,இனிமையாகப் பாடிபறக்கும் பட்சியும்.
↻ பல்லவி
2
மேலோர், கீழானோரையும்தத்தம் ஸ்திதியிலே,அரணில், குடிசையில்வசிக்கச் செய்தாரே
↻ பல்லவி
3
இலங்கும் அருவியும்,மா நீல மலையும்பொன் நிற உதயமும்குளிர்ந்த மாலையும்
↻ பல்லவி
4
வசந்த காலத் தென்றல்,பூங்கனித் தோட்டமும்காலத்துக்கேற்ற மழை,வெய்யோனின் காந்தியும்.
↻ பல்லவி
5
மரமடர்ந்த சோலைபசும் புல் தரையும்,தண்ணீர்மேல் தாமரைப்பூ,மற்றெந்த வஸ்துவும்.
↻ பல்லவி
6
ஆம், சர்வவல்ல கர்த்தாஎல்லாம் நன்றாய்ச் செய்தார்இதை நாம் பார்த்துப் போற்றநாவையும் சிஷ்டித்தார்.
↻ பல்லவி