பாமாலை · Hymn256

விண்ணோர்கள் போற்றும்

My God how wonderful Thou art

Projector

Lyrics

1
விண்ணோர்கள் போற்றும் ஆண்டவாஉம் மேன்மை அற்புதம்;பளிங்கு போலத் தோன்றுமேஉம் கிருபாசனம்!
2
நித்தியானந்த தயாபராஅல்பா ஒமேகாவேமா தூயர் போற்றும் ஆண்டவா,ராஜாதி ராஜாவே!
3
உம் ஞானம் தூய்மை வல்லமைஅளவிறந்ததே!நீர் தூயர் தூயர் உந்தனைதுதித்தல் இன்பமே!
4
அன்பின் சொரூபி தேவரீர்,நான் பாவியாயினும்,என் நீச நெஞ்சைக் கேட்கிறீர்உம் சொந்தமாகவும்.
5
உம்மைப் போல் தயை மிகுந்தஓர் தந்தையும் உண்டோ?உம்மைப்போல் அன்பு நிறைந்ததாய்தானும் ஈண்டுண்டோ?
6
என் பாவமெல்லாம் மன்னித்தீர்சுத்தாங்கம் நல்கினீர்;என் குற்றமெல்லாம் தாங்கினீர்;அன்பின் பிரவாகம் நீர்!
7
மேலோக நித்திய பாக்கியத்தைநான் பெற்று வாழுவேன்;உம் திவ்விய இன்ப முகத்தைகண்ணுற்றுப் பூரிப்பேன்.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

256B விண்ணோர்கள் போற்றும் · Windsor — Tamil Pamalai