பாமாலை · Hymn267

போற்றும் போற்றும் புண்ணிய நாதரை

Praise Him praise Him Jesus

Projector

Lyrics

1
போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.
2
போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா!
3
போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாகஆட்சி செய்வார் நித்திய காலமும்;ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,இயேசு சுவாமி, பூமியில் ஆளுமேன்;லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சிஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.
267 போற்றும் போற்றும் புண்ணிய நாதரை — Tamil Pamalai