பாமாலை · Hymn271
யாரை நான் புகழுவேன்?
Ask ye what great thing I know
1
யாரை நான் புகழுவேன்?யாரை நான் அறிகிறேன்?என் கதியும் பங்கும் யார்நான் பாராட்டும் மேன்மை யார்?தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
2
யார் நான் நிற்கும் கன்மலையார் என் திட நம்பிக்கை?குற்றத்தை சுமந்தோர் யார்தெய்வ நேசம் தந்தோர் யார்?தெய்வ ஆட்டுக்குட்டிதான்
3
எந்தன் பிராண பெலன் யார்ஆத்துமத்தின் சாரம் யார்?யாரால் பாவி நீதிமான்யாரால் தெய்வ பிள்ளை நான்?தெய்வ ஆட்டுக்குட்டியால்.
4
கஸ்தியில் சகாயர் யார்சாவின் சாவு ஆனோர் யார்?என்னைத் தூதர் கூட்டத்தில்சேர்ப்போர் யார் நான் சாகையில்?தெய்வ ஆட்டுக்குட்டிதான்
5
இயேசுதான் என் ஞானமேஅவர் என் சங்கீதமேநீங்களும் புகழுங்கள்அவரைப் பின்செல்லுங்கள்தெய்வ ஆட்டுக்குட்டியை.