பாமாலை · Hymn278

வாரும், தெய்வ ஆவி வாரும்

Komm O Komm du Geist des Lebens

Projector

Lyrics

1
வாரும், தெய்வ ஆவி வாரும்எங்கள் ஆத்துமத்திலேஎங்களுக்குயிரைத் தாரும்வாரும் சுத்த ஆவியேஉம்முடன் வெளிச்சமும்சீரும் ஜீவனும் வரும்.
2
எங்கள் நெஞ்சிலே நற்புத்திதெய்வ பயமும் வரஅதை நீர் குணப்படுத்திதப்பு நினைவாகியயாவையும் அதில் நீரேநீக்கும், தெய்வ ஆவியே.
3
மோட்சத்தின் வழியைக் காட்டி,சகல தடையையும்நீக்கி, எங்களைக் காப்பாற்றிநல்லோராக்கியருளும்கால் இடறிற்றேயாகில்துக்கம் தாரும் மனதில்.
4
நாங்கள் தெய்வ மைந்தரென்றுநீரே தீங்கு நாளிலும்சாட்சி தந்ததிரைவென்றுநெஞ்சைத் தேற்றியருளும்தெய்வ அன்பின் தண்டிப்புஎங்களுக்கு நல்லது.
5
எங்களைப் பிதாவிடத்தில்முழுபக்தியோடேயும்சேரப்பண்ணி, ஆத்துமத்தில்நீரும் கூப்பிட்டேயிரும்அப்போ கேட்டது வரும்நம்பிக்கையும் பெருகும்.
6
சாகும் காலம் வந்தால், நாங்கள்நித்திய மகிழ்ச்சியாய்வாழப்போகும் மோட்சவான்கள்என்றப்போ விசேஷமாய்நிச்சயத்தை நெஞ்சிலேதாரும், நல்ல ஆவியே.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

278 வாரும், தெய்வ ஆவி வாரும் — Tamil Pamalai