பாமாலை · Hymn307

நல் மீட்பரே உம்மேலே

I lay my sins on Jesus

Projector

Lyrics

1
நல் மீட்பரே, உம்மேலேஎன் பாவம் வைக்கிறேன்;அன்புள்ள கையினாலேஎன் பாரம் நீக்குமேன்;நல் மீட்பரே, உம்மேலேஎன் குற்றம் வைக்க, நீர்உம் தூய ரத்தத்தாலேவிமோசனம் செய்வீர்
2
நல் மீட்பரே, உம்மேலேஎன் துக்கம் வைக்கிறேன்இப்போதிம்மானுவேலேஎப்பாடும் நீக்குமேன்நல் மீட்பரே, உம்மேலேஎன் தீனம் வைக்க நீர்உம் ஞானம் செல்வத்தாலேபூரணமாக்குவீர்
3
நல் மீட்பரே, உம்பேரில்என் ஆத்மா சார, நீர்சேர்த்து உம் திவ்விய மார்பில்சோர்பெல்லாம் நீக்குவீர்;நேசா! இம்மானுவேலே!இயேசென்னும் நாமமும்உகந்த தைலம்போலேசுகந்தம் வீசிடும்
4
நல் மீட்பரே, பாங்காகஅன்போடு சாந்தமும்நீர் தந்தும் சாயலாகசீராக்கி மாற்றிடும்;நல் மீட்பரே, உம்மோடுபின் விண்ணில் வாழுவேன்;நீடூழி தூதர் பாட,பாடின்றிப் பூரிப்பேன்
307 நல் மீட்பரே உம்மேலே — Tamil Pamalai