பாமாலை · Hymn322
கர்த்தாவை நல்ல
Wer nur den lieben Gott lasst walten
1
கர்த்தாவை நல்ல பக்தியாலேஎப்போதும் நம்பும் நீதிமான்எத்தீங்கிலேயும் அவராலேஅன்பாய்க் காப்பாற்றப்படுவான்உன்னதமான கர்த்தரைசார்ந்தோருக்கவர் கன்மலை.
2
அழுத்தும் கவலைகளாலேபலன் ஏதாகிலும் உண்டோ?நாம் நித்தம் சஞ்சலத்தினாலேதவிப்பது உதவுமோ?விசாரத்தாலே நமக்குஇக்கட்டதிகரிக்குது.
3
உன் காரியத்தை நலமாகதிருப்ப வல்லவருக்குநீ அதை ஒப்புவிப்பாயாகவிசாரிப்பார், அமர்ந்திருமா திட்டமாய்த் தயாபரர்உன் தாழ்ச்சியை அறிந்தவர்.
4
சந்தோஷிப்பிக்கிறதற்கானநாள் எதென்றவர் அறிவார்அநேக நற்குணங்கள் காணஅந்தந்த வேளை தண்டிப்பார்தீவிரமாய்த் திரும்பவும்தெய்வன்பு பூரிப்பைத் தரும்.
5
நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்என்றாபத்தில் நினையாதேஎப்போதும் பாடும் நோவுமற்றோன்பிரியனென்றும் எண்ணாதேஅநேக காரியத்துக்குபின் மாறுதல் உண்டாகுது.