பாமாலை · Hymn318

உம் சார்பினில் நடத்தும்

Lead us O Father in the paths

Projector

Lyrics

1
உம் சார்பினில் நடத்தும், தந்தையே;உம் துணையின்றி தவறுவோமே,சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்;மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும்.
2
சத்தியத்தில் நடத்தும், தந்தையே;உம் துணையின்றி கேடு சூழுமே;வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்,சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்.
3
சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே;உம் துணையின்றி வழி காணோமே;கார்மேகம் மூடி இருள் சூழுவோம்,உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்.
4
விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே;காடு மேடான பாதை என்றுமே,உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.
318 உம் சார்பினில் நடத்தும் — Tamil Pamalai