பாமாலை · Hymn33

இந்நாள் வரைக்கும் கர்த்தரே

Glory to thee my God this night

Projector

Lyrics

1
இந்நாள் வரைக்கும் கர்த்தரேஎன்னைத் தற்காத்து வந்தீரேஉமக்குத் துதி ஸ்தோத்திரம்செய்கின்றதே என் ஆத்துமம்.
2
ராஜாக்களுக்கு ராஜாவே,உமது செட்டைகளிலேஎன்னை அணைத்துச் சேர்த்திடும்இரக்கமாகக் காத்திடும்.
3
கர்த்தாவே, இயேசு மூலமாய்உம்மோடு சமாதானமாய்அமர்ந்து தூங்கும்படிக்கும்,நான் செய்த பாவம் மன்னியும்.
4
நான் புதுப் பலத்துடனேஎழுந்து உம்மைப் போற்றவேஅயர்ந்த துயில் அருளும்என் ஆவியை நீர் தேற்றிடும்.
5
நான் தூக்கமற்றிருக்கையில்,அசுத்த எண்ணம் மனதில்அகற்றி, திவ்விய சிந்தையேஎழுப்பிவிடும், கர்த்தரே,
6
பிதாவே, என்றும் எனதுஅடைக்கலம் நீர், உமதுமுகத்தைக் காணும் காட்சியேநித்தியானந்த முத்தியே.
7
அருளின் ஊற்றாம் ஸ்வாமியைபிதா குமாரன் ஆவியைதுதியும், வான சேனையேதுதியும், மாந்தர் கூட்டமே.
33 இந்நாள் வரைக்கும் கர்த்தரே — Tamil Pamalai