பாமாலை · Hymn36
1
என்னோடிரும் மா நேச கர்த்தரேவெளிச்சம் மங்கி இருட்டாயிற்றேமற்றோர் சகாயம் அற்ற போதிலும்நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும்.
2
நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்கண் கண்ட யாவும் மாறி வாடிடும்மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும்.
3
நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
4
நீர் கூட நின்று அருள் புரியும்பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணைநீர், என் தஞ்சமாயிரும்இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
5
நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
6
நான் சாகும் அந்தகார நேரத்தில்உம் சிலுவையைக் காட்டும் சாகையில்விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.