பாமாலை · Hymn363
நான் உம்மை முழுமனதால்
Thee will I love, my Strength
1
நான் உம்மை முழுமனதால்சிநேகிப்பேன் என் இயேசுவேநான் உம்மை நித்தம் வாஞ்சையால்பின்பற்றுவேன் என் ஜீவனேஎன் சாவு வேளை மட்டும் நீர்என் நெஞ்சில்தானே தங்குவீர்.
2
நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம்என் உத்தம சிநேகிதர்நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம்நீரே என் மீட்பரானவர்நான் உம்மை முன் சேராததேநிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே.
3
உம்மைப் பற்றாமல் வீணணாய்பொல்லாங்கைச் செய்து சுற்றினேன்பரத்தை விட்டுத் தூரமாய்இகத்தை அன்பாய்ப் பற்றினேன்இப்போ நான் உம்மைச் சேர்ந்ததுநீர்தாமே செய்த தயவு.
4
நான் உம்மைச் சுக வாழ்விலும்சிநேகிப்பேன் என் கர்த்தரேநான் உம்மைத் துன்பநாளிலும்நேசிப்பேன் எந்தன் இயேசுவேஎன் சாவு வேளை மட்டும் நீர்என் நெஞ்சில்தானே தங்குவீர்.