பாமாலை · Hymn369
என் ரஷகா நீர் என்னிலே
O Jesus Christ grow thou in me
1
என் ரக்ஷகா, நீர் என்னிலேமென்மேலும் விளங்கும்;பொல்லாத சிந்தை நீக்கவேசகாயம் புரியும்.
2
என் பலவீனம் தாங்குவீர்மா வல்ல கரத்தால்;சாவிருள் யாவும் நீக்குவீர்மெய் ஜீவன் ஜோதியால்.
3
துராசாபாசம் நீங்கிடும்உந்தன் பிரகாசத்தால்;சுத்தாங்க குணம் பிறக்கும்நல்லாவி அருளால்.
4
மாசற்ற திவ்ய சாயலைஉண்டாக்கியருளும்;என்னில் தெய்வீக மகிமைமென்மேலும் காண்பியும்.
5
சந்தோஷிப்பித்துத் தாங்குவீர்ஒப்பற்ற பலத்தால்;என் நெஞ்சில் அனல் மூட்டுவீர்பேரன்பின் ஸ்வாலையால்.
6
நீர் பெருக, நான் சிறுகநீர் கிரியை செய்திடும்;மெய் பக்தியில் நான் வளரகடாட்சித்தருளும்.