பாமாலை · Hymn418
திவ்ய ஐக்கியத்தில்
When we walk with the Lord
பல்லவி
கீழ்ப்படிவோம்தேவ சித்தஞ்செய்வோம்திருவாக்கை எப்போதும்நம்பிக் கீழ்ப்படிவோம்
1
திவ்ய ஐக்கியத்தில்நிலைப்போமேயாகில்அருள் ஜோதியிலே நடப்போம்வல்ல ஆவியினால்தேவ சித்தஞ்செய்தால்பெரும் பாக்யம் பெற்றே வாழுவோம்
↻ பல்லவி
2
மேகம் தோன்றுமானால்அன்பின் சூரியனால்அது நில்லாமல் மறைந்தே போம்சோர்வு சந்தேகமும்அவ நம்பிக்கையும்அணுகாமலே முன் செல்லுவோம்
↻ பல்லவி
3
எந்த வேளையிலும்இன்ப துன்பத்திலும்அருள் நாதர் சகாயஞ்செய்வார்வரும் சோதனையோமனோ சஞ்சலமோஇவை நீக்கியே பாதுகாப்பார்
↻ பல்லவி
4
நம்பி கீழ்ப்படிந்தேதிருப்பாதத்திலேநம்மை முற்றிலும் ஒப்புவிப்போம்பெரு நன்மை ஈவார்அபிஷேகஞ்செய்வார்தேவ ஆவியைப் பெற்றுக்கொள்வோம்
↻ பல்லவி
5
கர்த்தரோடின்பமாய்அந்நியோந்நியமாய்நீங்காமல் வாசஞ் செய்வோம்அவர் சொற்படியேஉண்மையோடுடனேமனோற்சாகமாய்க் கீழ்ப்படிவோம்
↻ பல்லவி