பாமாலை · Hymn432
பேரன்பர் இயேசு நிற்கிறார்
The Great Physician now is near
பல்லவி
விண்ணில் மேன்மையானது,மண்ணோர்க்கின்பமானது,பாடிப் போற்றும் நாமமேஇயேசு என்னும் நாமம்.
1
பேரன்பர் இயேசு நிற்கிறார்,நாம் சேர்த்துக் கொள்ளுவோமே;கடாட்சமாகப் பார்க்கிறார்,நல் நாமம் போற்றுவோமே
↻ பல்லவி
2
ரட்சண்ய வல்ல நாமத்தால்நம் துக்கம் நீங்கிப் போகும்அவ்வின்ப நாமம் கேட்பதால்சந்தோஷமும் உண்டாகும்.
↻ பல்லவி
3
நல் மீட்பர் யாவர் பேரிலும்கடாட்சம் வைக்கிறாரே;தம் அண்டை சிறியோரையும்தள்ளாமல் சேர்க்கிறாரே.
↻ பல்லவி
4
ஆனந்தமாகப் பாடுவோம்பேராவலோடு வாரும்;ஏகோபித்தார வாரிப்போம்,மெய் பக்தர் தாசர் யாரும்
↻ பல்லவி
5
பேரின்ப மோட்ச லோகத்தில்மாண்பாகக் கூடுவோமே,ரட்சண்ய நாதர் பாதத்தில்சாஷ்டாங்கம் பண்ணுவோமே.
↻ பல்லவி