பாமாலை · Hymn428

ராயரே! புயல் வீசுதே

Master the tempest

Projector

Lyrics

1
ராயரே! புயல் வீசுதேகடல் அலை பொங்குதேகாரிருள் எங்கும் மூடிடுதேபுகல், கதி இல்லையேமாள்கிறோமே, பாரீரோ நீர்தூக்கம் கொண்டீர் ஏனோ?ஒவ்வோர் வேளையும் கடல் பொங்கியேவிழுங்கப் பார்க்குதையோ!
2
காற்றே, கடலே, நீ அடங்குவாய் சாந்தமாய்கொந்தளிக்கும் கடலாயினும்பிசாசுகள், மனிதர் யாராயினும்கடல், பூமி, வானராஜன் தங்கும்படகை விழுங்காதே, ஆழியும்;அனைத்தும் என் சித்தம் அடங்கும்;அடங்கும்; அடங்கும்;அனைத்தும் என் சித்தம் அடங்கும் மா சாந்தமாய்.
3
ராயரே, சஞ்சலத்தாலேநோகுதே என் மனமும்கலங்கும் என் இதயத்தை நீர்உணர்த்தி ரட்சியுமே;பாவச் சஞ்சல வெள்ளமும்ஆத்மா மேல் பாயுதேநாங்கள் அமிழ்ந்து போகுமுன், நாதாஉடனே நீர் அமர்த்தும்
4
ராயரே! திகில் நீங்கிற்றே,ஓலமும் அமர்ந்தது;நீதியின் சூரியனும் தோன்றி,இதயத்தில் வந்ததே;நில்லும் அருமை மீட்பரே,தனியாய் விடாதீர்உம்மில் பூரிப்பாய் அக்கரை சேர்ந்துபாக்யனாய் வாழ்வேன் அங்கே
428 ராயரே! புயல் வீசுதே — Tamil Pamalai