பாமாலை · Hymn447

பூவின் நல் வாசம்

Down in the valley with my saviour

Projector

Lyrics

பல்லவி
பின் செல்வேனே! மீட்பர் பின் செல்வேனே!எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்பின் செல்வேனே! மீட்பர் பின் செல்வேனே!இயேசு காட்டும் பாதை எல்லாம் செல்லுவேன்.
1
பூவின் நல் வாசம் வீசும் சோலையாயினும்,நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்,இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்
↻ பல்லவி
2
கார் மேகம் மேலே மூடும் பள்ளமெங்கிலும்காற்றகோரமாக மோதும் ஸ்தானத்திலும்இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்;ரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்
↻ பல்லவி
3
நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்,மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்,விண்ணில் தாசரோடு சேர்த்து வாழ்விப்பார்
↻ பல்லவி
447 பூவின் நல் வாசம் — Tamil Pamalai