பாமாலை · Hymn453
பல்லவி
செல்லுவோம்! வெல்லுவோம்!நல் மீட்பர் நாமம் மூலமாய்வெற்றி சிறப்பார், ஆளுவார்,பூமி எங்கும் ஜோதியாய்.
1
ஜெய ராஜ கோடி ஏற்றிக் காட்டியேயுத்தம் செய்யச் செல்லுவோம்;வெற்றிமாலை சூடி ஜெயம் பெறவேபூரிப்போடு பாடுவோம்.
↻ பல்லவி
2
எதிர்ச் சேனை சீறிப் பாய்ந்து வரினும்ராஜ கொடி காட்டுவோம்;திரள் கூட்டமே போராட்டம் செய்யினும்வெற்றி வேந்தராகுவோம்
↻ பல்லவி
3
எந்தத் தேச ஜாதி பாஷைக்காரரும்சுவிசேஷம் கேட்பதால்இயேசு நாதர் மாண்பாய் ஆளும் காலமும்மா சமீபமானதால்
↻ பல்லவி
4
அந்த நல்ல காலம் வந்த உடனேராஜரீகம் பண்ணுவார்;அவபக்தி யாவும் ஒழிந்திடவேநீதி நிலை நாட்டுவார்.
↻ பல்லவி