பாமாலை · Hymn465
தூதர் வாழும் நதி தீரம்
Shall we gather at the river
பல்லவி
சேர்வோம் ஜீவ நதி தீரம்,மனோகரமாம் ஜீவ நதி தீரம்,தேவனின் சிங்காசனம் சமீபம்வானோரோடும் பாடுவோம்.
1
தூதர் வாழும் நதி தீரம்நாமும் சென்று சேர்வோமா?தேவ ஆசனம் சமீபம்சேர்ந்து கீதங்கள் பாடுவோமா?
↻ பல்லவி
2
சோபை வீசும் நதி தீரம்இன்பமாய் உலாவுவோம்,நித்ய பொற்பகலில் பாக்யம்பெற்று இயேசுவை ஆராதிப்போம்.
↻ பல்லவி
3
நதி தீரம் சேறு முன்னேபாரம் யாவும் தள்ளுவோம்;ஆன்ம சுத்தியும் அடைந்தேஅங்கி கிரீடமும் சம்பாதிப்போம்.
↻ பல்லவி
4
வேகம் சேர்வோம் நதி தீரம்,வேகம் யாத்திரை தீருமே;வேகம் பாடுவோம் சங்கீதம்,சூதர் சேனையோடென்றென்றுமே
↻ பல்லவி