பாமாலை · Hymn468

மேலோக வரலாறு

I love to tell the story

Projector

Lyrics

பல்லவி
மண்ணில் என் வாஞ்சை இயேசு, வரலாறு சொல்வதேவிண்ணில் இயேசுவும் அன்பும், பாடும் பொருள் என்றும்
1
மேலோக வரலாறு ஆவலாய்க் கூறுவேன்இயேசுவும் மகிமையும் கிறிஸ்துவும் உள்ளன்பும்மெய்யென்று அறிவேன் நான் சொல்ல ஆசிக்கின்றேன்என் ஆவல் பூர்த்தியாகும் நேசர் மா அன்பினால்
↻ பல்லவி
2
அற்புத தெய்வ செய்தி சொல்ல வாஞ்சிக்கிறேன்கனவு நினைவிற்கும் எட்டா அதிசயம்நான் பெற்ற நன்மை பல, சொல்ல ஆசிக்கின்றேன்இந்த நன்மைக்காகவே, இதொன்றே உன் தேவை.
↻ பல்லவி
3
சொல்ல சொல்ல இன்பமே, தெவிட்டாத வாஞ்சை,சொல்லும் போதெல்லாம் இன்பம் அதிசய அன்பு;ஆத்ம ரட்சிப்பின் செய்தி பலர் கேட்டதில்லைவேத தூய சத்தியம் சொல்ல வாஞ்சிக்கிறேன்
↻ பல்லவி
468 மேலோக வரலாறு — Tamil Pamalai