பாமாலை · Hymn508
கர்த்தாவே போன இரவில்
Glory to Thee Who safe has kept
1
கர்த்தாவே போன இரவில்இரக்கம் காண்பித்து,தற்காத்ததாலே உம்மையேதுதித்தல் ஏற்றது
2
இருளில் என்னை நீர் அன்பால்எவ்விக்கினத்துக்கும்விலக்கிக் காத்திராவிட்டால்பொல்லாங்கு நேரிடும்
3
நான் அதற்காக ஸ்தோத்திரம்செலுத்தி நிற்கிறேன்நீர் என்னில் கண்ட மீறுதல்மன்னிக்கக் கேட்கிறேன்
4
எந்நாளும் என்னைச் சத்துருகெடுக்கப் பார்க்குமேஅநேகமான கண்ணிக்குநேராய் நடத்துமே
5
திரியேகரே இரக்கமாய்என்னை நீர் ரட்சியும்விழித்திருக்க மா அன்பாய்பலத்தைத் தந்திடும்