பாமாலை · Hymn510
தூதர் வணங்கும் தேவன்
I cannot tell Why
1
தூதர் வணங்கும் தேவன் மானிடர் மேல்ஏன் அன்பு கொண்டார்? என்பதறியேன்;அலைந்து திரிந்தோரை அன்பாய்த் தேடிமேய்ப்பன் போல் மீட்டுக் கொண்டார், அறிவேன்பெத்லகேம் முன்னணையை வீடாய்க் கொண்டுமரியின் பாலனாகத் தோன்றினார்சிற்றூராம் நாசரேத்தில் வாழ்ந்து வந்தார்உலக இரட்சகர் இவர், என்றறிவேன்.
2
இன்னலின் பள்ளத்தாக்காம் இவ்வுலகைமெய்ச் சமாதானத்தால் நிரப்பினார்.மௌனமாக நோவு, பாடுகள் ஏற்று,சிலுவையில் திருப் பலியானார்.இவரே நம் பாவப் பளுவை நீக்கி,நீதியின் இளைப்பாறுதல் ஈவார்;உடைந்த உள்ளங்களைச் சுகமாக்கஇதோ! உலக இரட்சகர், இங்கே உள்ளார்.
3
அன்பால் மானிட உள்ளங்கள் நிரம்பிமா பெரும் கோலாகலம் எழும்பும்,விண், மண் எல்லாம் தேவனை வணங்கிடும்,அவர் சொல்ல புயல்கள் அமையும்.கெம்பீரித்து வானங்கள் பூரிப்பாகும்,எண்ணற்ற மானிடக் குரல் பாடும்:"அவரே ராஜா! உலகின் நாள் மீட்பர்! "என்று கோளங்கள் யாவும் எதிரொலிக்கும்.