பாமாலை · Hymn520
ஜகத்து நீதிபதியே
O quickly come, dread Judge of all
1
ஜகத்து நீதிபதியே,சந்தேகம், மருள் நீக்கிடும்;மகத்வ உம்தன் காட்சியேமெய்மை விளங்கச் செய்திடும்:விரைந்து வாரும், உம்முன்னேமறையும் எந்தப் பொய்யுமே.
2
மன்னர் மன்னா, வந்தாலும்மண்ணிலும் தாசர் நெஞ்சிலும்;இன்னா இக்கட்டு நீங்கவேஇனத்தின் பாவம் மாய்த்திடும்;விரைந்து வாரும், உம்முன்னேமறையும் எந்தத் தீங்குமே.
3
எல்லா நரர்க்கும் ஜீவனே,இவ்வீட்டிலும் பலத்தோடும்பொல்லாத சாவு புகவேபாடுற்றோம் அடியார்களும்;விரைந்து வாரும், உம்முன்னேமறையும் நோவு சாவுமே.
4
மெய்யான எங்கள் ஜோதியே,மங்குல் எப்பாலும் மூடவும்,அய்யா, உம்தன் வருகைக்கேஆசித்து நின்றோம் நாங்களும்:விரைந்து வாரும், இயேசுவே,வந்தடியாரைத் தேற்றுமே.