பாமாலை · Hymn522
வாரம் முற்றும் ஷேமமாய்
Safely through another week
1
வாரம் முற்றும் ஷேமமாய்தேவன் காத்தார் தயவாய்ஆலயத்தில் கூடுவோம்வேதங் கேட்டு வாழ்த்துவோம்;வாரத்தில் மேலானதேமோட்சம் காட்டும் நாள் இதே
2
இயேசு நாதர் ரத்தத்தால்நீதியை நாம் பெற்றதால்நேசர் அவர் நாமத்தில்கூடி வேதங் கேட்கையில்லோக வேலை விட்டோய்வோம்வாஞ்சையோடாராதிப்போம்
3
தேவ ஆவி அருளால்தேவ அன்பைக் காண்பதால்ஆவலாகப் போற்றுவோம்தேவ சாயல் ஆகுவோம்மோட்ச வீட்டின் வாழ்விலேவாழ்வோமாக பாலரே
4
மாசிலா எருசலேம்நாம் வசிக்கும் ஆலயம்நீதி அங்கி பெற்றதால்ஜோதியுள்ளோர் இயேசுவால்வாரம் தோறும் பாடுவோம்வேதம் ஓதிப் போற்றுவோம்