பாமாலை · Hymn540
தயாபரா என் உள்ளத்தில்
Jesus! Thine all victorious love
1
தயாபரா, என் உள்ளத்தில்தெய்வன்பை ஊற்றுமேன்;அப்போது திவ்ய நேசத்தில்வேரூன்றி நிலைப்பேன்.
2
வானாக்னி என்னில் மூட்டியே,துராசை எரிப்பீர்;எப்பாவ மேடும் குன்றுமேஉருக்கி விடுவீர்.
3
முன் பெந்தெகோஸ்தே நாளிலேதீ போலத் தோன்றீனீர்;சுட்டெரிப்பின் நல்லாவியே,என் பாவம் அழிப்பீர்.
4
என் ஐம்புலன்கள் யாவையும்ஊடுருவிச் சென்றேசுத்தாங்கம், ஜீவன், ஜோதியும்உண்டாகச் செய்யுமே.
5
அப்போது இடறாமலும்நற் பாதை செல்லுவேன்;என் மீட்பர் பேரில் முற்றிலும்எக்காலும் சாருவேன்.