பாமாலை · Hymn580
பல்லவி
இன்ப நாள்! இன்ப நாள்!என் பாவம் தீர்ந்து போன நாள்பேரன்பர் என்னை இரட்சித்தார்சீராக்கி இன்பம் நல்கினார்இன்ப நாள்! இன்ப நாள்!என் பாவம் தீர்ந்து போன நாள்
1
என் பாவம் தீர்ந்த நாளையேஅன்போடு எண்ணி ஜீவிப்பேன்அந்நாளில் பெற்ற ஈவையேசந்தோஷமாய்க் கொண்டாடுவேன்
↻ பல்லவி
2
என் உள்ளமே உன் மீட்பரைஎன்றைக்கும் சார்ந்து வாழுவாய்ஆருயிர் தந்த நாதரைஓர்காலும் விட்டு நீங்கிடாய்
↻ பல்லவி
3
ஆட்கொண்ட நாதா என்தனைநாடோறும் தத்தஞ் செய்குவேன்பின் மோட்ச வீட்டில் பேரன்பைஇன்னோசையாலே பாடுவேன்
↻ பல்லவி