பாமாலை · Hymn583

காணாமற் போன என்னை

In tenderness He sought me

Projector

Lyrics

பல்லவி
நேசர் தேடி வந்தார்இரத்தம் சிந்தி மீட்டார்என்னைச் சொந்தமாகக்கொண்டனர்பேரன்போடு சேர்த்துக்கொண்டனர்
1
காணாமற் போன என்னைநல் மேய்ப்பர் தேடினார்.தம் தோளின் பேரில் போட்டுக்கொண்டன்பாய் இரட்சித்தார்.மேலோக யூதர் கூடினார்;ஆனந்தம் பொங்கிப் பாடினார்.
↻ பல்லவி
2
என் பாவ காயங்காட்டி,வீண் பயம் நீக்கினார்."என் சொந்தமாக உன்னைக்கொண்டேனே பார்" என்றார்.அவ்வின்ப சத்தம் கேட்கவே,என் உள்ளம் பூரிப்பாயிற்றே.
↻ பல்லவி
3
இப்போது இன்பமாகஎன் மீட்பர் பாதத்தில்ஒப்பற்ற திவ்ய அன்பைத்தியானஞ் செய்கையில்ஆனந்தம் பொங்கிப் பூரிப்பேன்மேன்மேலும் பாடிப்போற்றுவேன்.
↻ பல்லவி
4
ஆட்கொண்ட நாதர் பின்புபிரசன்னமாக்குவார்தம் ஞான மணவாட்டிசேர்த்தென்றும் வாழ்விப்பார்இம்மாசும் நீங்கிப் போம்பேரின்பம் பெற்று வாழுவோம்.
↻ பல்லவி
583 காணாமற் போன என்னை — Tamil Pamalai