பாமாலை · Hymn588

வல்ல தேவன் கூறுவித்து

Precious promise God hath given

Projector

Lyrics

பல்லவி
உன்தன் மேல் என் கண்ணை வைத்துஎன்றும் பாதை காட்டுவேன்;இன்ப மோட்சம் சேரு மட்டும்என்றும் பாதை காட்டுவேன்
1
வல்ல தேவன் கூறுவித்துச்சொல்லும் வாக்கைக் கேளுமேன்;உன்தன் மேல் என் கண்ணை வைத்துஎன்றும் பாதை காட்டுவேன்;
↻ பல்லவி
2
சாத்தான் மாம்சம் லோகத்தாலும்ஆத்மா சோர்ந்து போவதேன்?என்தன் ஆவி வாக்கினாலும்என்றும் பாதை காட்டுவேன்
↻ பல்லவி
3
துன்பம் துக்கம் நேரிட்டாலும்இன்பமாக மாற்றுவேன்;என்ன சோதனை வந்தாலும்என்றும் பாதை காட்டுவேன்
↻ பல்லவி
4
சாவின் பள்ளத்தாக்கிலேயும்ஜீவ ஜோதி வீசுவேன்;உன்னைத் சேர்த்து விண்ணிலேயும்என்றும் பாதை காட்டுவேன்
↻ பல்லவி
588 வல்ல தேவன் கூறுவித்து — Tamil Pamalai