பாமாலை · Hymn597
சந்தோஷத்தோடிருங்கள்
Rejoice now all ye faithful
1
சந்தோஷத்தோடிருங்கள்எல்லா சன்மார்க்கரேதுதி பலியிடுங்கள்ராஜாதி ராஜாவேரட்சிப்புண்டாக்குவார்,பொல்லாங்கனை நன்றாகஜெயிக்க ஏழையாகபிறந்திருக்கிறார்.
2
எளியோராய் வந்தேறிதம்மைத் தாம் தாழ்த்தினார்உலக வாழ்வைத் தேடிபகிர வந்திரார்நமக்கு வானவர்சுதந்திரமுண்டாகஅவர் பலியாய் சாகஇங்கவதரித்தார்.
3
பரங்களுக்கும் ஏறஉயர்ந்த ஆண்டவர்செங்கோல், க்ரீடமுந் தேடஇப்பூமியில் வரார்;மாமேன்மையாய் வந்தார்,புவியில் நமக்காகமரிக்கும் நாள் மட்டாகமகிமை துறந்தார்.
4
மனிதரே, நற்புத்திஅடைந்து, இவர்க்கேகனமெல்லாஞ் செலுத்தி,நடுக்கத்துடனேஇருந்தால் மா பாக்கியம்ஏன், கீழ்ப்படாதோர் மீதுஇனி இறங்குந் தீதுமகா பயங்கரம்.
5
இப்போதும் இங்கும் அங்கும்உபத்ரவத்திலேஇக்கட்டினால் கலங்கும்எளியவர்களே,எல்லா பயத்தையும்மறந்து, இவர் தாமேஎல்லாக் கதியுமாமேஎன்றாடிப் பாடவும்.
6
தம்மை மகிமையாகவெளிப்படுத்துவார்,அப்போ மா பூரிப்பாகதுக்கத்தை மாற்றுவார்கண்ணீரைத் துடைப்பார்.தீவர்த்தியைப் பிடித்து,ஜெபத்திலே விழித்துஇருங்கள் வருவார்.