பாமாலை · Hymn594

இயேசு ஸ்வாமியே நீர் சொல்லும்

Speak O Lord Thy servant

Projector

Lyrics

1
இயேசு ஸ்வாமியே, நீர் சொல்லும்,நானோ கவனிக்கிறேன்.நீர் உரைக்கக் கேட்டுக் கொள்ளும்வசனத்தை அடியேன்நல் இருதயத்திலேஏற்றுக் கொண்டுமக்கென்றேநான் பிழைக்கிறதற்க்காகபலத்தை அளிப்பீராக.
2
நேசரே, நீர் போதித்திடும்வார்த்தை யாவும் எனக்குமீட்புக்கே எனை அழைக்கும்;எந்தன் துக்கம் நீங்கிற்று,ஒப்பில்லாத அச்செல்வம்,.தேனிலேயும் மதுரம்அதை நான் மகிழ்ச்சியாகக்கேட்டுக் கவனிப்பேனாக.
3
உமதுபதேசத்தாலேஎன்றும் இளைப்பாறுவேன்,அதை நான் மா வாஞ்சையாலேநெஞ்சில் வைத்துக் காக்கிறேன்;உம்மை அங்கே நேரிலேகேட்கும் வரை, இயேசுவே,அதை என்றைக்கும் அன்பாகஎன்னிடத்தில் காப்பீராக.
4
என் ஜெபத்தைக் கவனியும்,நேசமுள்ள இயேசுவேநிலை நிற்க ஈவளியும்அப்போதும்மை தினமேஎந்த நிமிஷத்திலும்வாய், இதயத்தாலேயும்தாழ்மையாக நான் துதிப்பேன்போற்றிப் பாடித் தோத்திரிப்பேன்.
594 இயேசு ஸ்வாமியே நீர் சொல்லும் — Tamil Pamalai