பாமாலை · Hymn598

நீர் வெளியே நில்லீராக

Wilt Thou stand without forever

Projector

Lyrics

1
நீர் வெளியே நில்லீராகஆசீர்வாதக் கர்த்தரே,தயை கூர்ந்தென்னிடமாகவந்திறங்கும் இயேசுவே.என் மகிழ்சி தேவரீர்,சமய சகாயர் நீர்ஆ, என் உள்ளத்தில் எரியும்காய நோவை ஆற்றுவியும்.
2
தெய்வ நீதியென்ற சுத்திஉள்ளத்தை நொறுக்குமேபயங்காட்டும் அதன்புத்திகத்திபோல் அறுக்குமே;என் பிதாவின் கோபமும்சாபக் குமுறல்களும்சத்தமாய் என் மேல் முழங்கும்;என் மனமெல்லாங் கலங்கும்.
3
கிருபைக்குக் காத்திராதே,நரக நெருப்புக்குஉள்ளாவாய் என்றோய்வில்லாதேபேயுங் கூவுகின்றது.இதமெல்லாம் தினமும்சுய மனசாட்சியும்என்னை வெகுவாய் வருத்தும்மேலும் வேதனைப்படுத்தும்.
4
நோவை லோகத்தாரிடத்தில்ஆற்றப் போனேனேயாகில்,கேடு பெருகும் இடத்தில்சேர்ந்தால் வரும் தீதெனில்மோசம் போக்கும் ஆறுதல்,துக்கமாஞ் சந்தோஷங்கள்.எத்தரான அனுசாரர்,பரிகாச நேசக்காரர்.
6
உலகத்தில் யாவுங் குப்பையாவும் சாரமற்றது,எந்தப் பெருமை யிருப்பைபெற்றும் என்ன; வாடும் பூஉலக திரவியம்அன்றன்றுள்ள சஞ்சலம்;இன்பங்கண்டால் இன்று வாழ்வு;நாளை துக்கமான தாழ்வு.
5
இயேசுவே சந்தோஷம் யாவும்உம்மில் இருக்கின்றதுநீரே எந்தன் பாதுகாப்பும்,நீரே எந்தன் பூரிப்புஎன் மகா இக்கட்டிலேஎன்னைத் தேற்றும் இயேசுவே,ஸ்வாமி, என்னை ஆதரியும்ஒளியே என்னில் உதியும்
598 நீர் வெளியே நில்லீராக — Tamil Pamalai