பாமாலை · Hymn600
தூதர்கள் சந்தோஷமாக
All my heart this night rejoices
1
தூதர்கள் சந்தோஷமாகபாடவே என்னிலேநெஞ்சு துள்வதாக,கேளுங்கள், ஆகாயமெங்கும்கிறிஸ்துவின் பிறப்பின்கீதங்கள் முழங்கும்.
2
இன்று ரட்சகர் பிறந்தார்,நமது மீட்புக்குமீட்பராய் உதித்தார்தேவமைந்தன் தாழ வந்தார்கடவுள், நமக்குள்மைந்தனாய்ப் பிறந்தார்.
3
கேட்டை நம்மை விட்டகற்றஇன்றக்கு நமக்குதாம் பிரியப்பட்டமைந்தனைக் கொடுத்த நல்லஆண்டவர், மனிதர்எதிரியும் அல்ல.
4
தம்மை நமக்கீவாய்த் தந்துநமது வேதனைஎல்லாம் நீக்க வந்து,மீட்பரான தேவபிள்ளைநேசமும் தயவும்குறைவைப்பதில்லை.
5
கெட்டுப்போன நமக்காகப்பாடுமாய் நோவுமாய்மீட்பளித்து சாக,ஆட்டுக்குட்டியாகத் தாமேதாழ்மையாய் சாதுவாய்இங்கே வந்தோராமே.
6
ஆகையால் எல்லோருமாக்துக்கத்தைத் தீர்ப்பாரைஅண்டிக் கொள்வோமாக.நல்ல நேசர் இவர்தாமேதயையும் ஜீவனும்இவரால் உண்டாமே.