பாமாலை · Hymn605
ஓர் ஆட்டுக்குட்டி
A lamb goes uncomplaining forth
1
ஓர் ஆட்டுக்குட்டி மீட்குதல்உண்டாக்க இங்கே வந்து,பூலோகத்தாரின் பாவங்கள்அனைத்தையும் சுமந்துஇளைப்பையும் தவிப்பையும்அடைந்து, எந்த நோவுக்கும்உபாதிக்கும் அடிக்கும்கீழாகி, நிந்தைகளையும்தீட்பான சாவைக்கூடவும்தானாய் அனுபவிக்கும்.
2
இவ்வாட்டுக்குட்டி எனக்காய்அன்போடு வந்த மீட்பர்இவர் பிதாவின் சுதனாய்குறித்த சாபந் தீர்ப்பார்,‘என் பிள்ளையே, நான் தண்டிக்கஏற்றவரான சகலமாந்தரை மீட்பாயாக;கோபாக்கினை பெரியது,நீயோ எல்லாஞ் சகித்திரு’,என்றார் இரக்கமாக.
3
மரத்தில் ஆணிகளினால்அடிக்கப்பட்டுத் தொங்கி.உள்ளே வியாகுலங்களால்நிறையப் பெற்றுப் பொங்கி,புறம்பே ரத்த ஊற்றானார்.எதனால் கேட்டுக்குட்பட்டார்?சிநேகத்தாலே தானே.ஆ, உமதன்புக்கேற்றதாம்துதியை யார் செலுத்தலாம்.மகா இரக்கவானே.
4
இவன்பை உயிருள்ள நாள்எல்லாம் மறக்க மாட்டேன்;அன்பால் ஒழிய வேறொன்றால்இனி என் நெஞ்சை ஆற்றேன்.நீர் என் வெளிச்சம், என் பலம்நான் மாளும்போதும் என் திடம்என் கன்மலையும் பங்கும்.ஆ, என் மனமகிழ்ச்சியேநான் உமக்குப் பிழைக்கவேஒத்தாசை செய்திரங்கும்.
5
அப்போது இந்த ரத்தமேஅடியேன் பரலோககதியாம் பரதீசிலேமகிழ்ச்சியோடே போகவழியை உண்டு பண்ணுமே.சாவில் ஒர் மாசுமின்றியேபிதாவின் முன்னே நிற்பேன்.ஜீவப் பொற்க்ரீடம் பெர்றோனாய்மூவேகரை மகிழ்ச்சியாய்எப்போதும் தோத்தரிப்பேன்.