பாமாலை · Hymn607
என் பாவங்களினாலே
When over my sins I sorrow
1
என் பாவங்களினாலேஉண்டாந் திகிலிலேநீரே இரக்கத்தாலேஎன் ஸ்வாமி இயேசுவே,என் பாவப்பாரம் யாவையும்சுமந்து மாண்ட அன்பும்என் நெஞ்சைத் தேற்றவும்.
2
இத்தயவை நன்றாகஆராய்பவர்கள் யார்கர்த்தர் அடியார்க்காகப்பாடு சகிக்கின்றார்மா அற்புதம், தயாபரர்சீர்கெட்ட பாவிக்காகஉயிரைத் தந்தவர்.
3
என் பாவத் திரளாலேஇனிப்பயம் உண்டோ,கர்த்தாவின் ரத்தத்தாலேநான் நீதிமான் அல்லோ,என் கிறிஸ்துக்குள் ஒதுங்கினேன்ஆம், நரகாக்கினைக்குஇனிப்பயப்படேன்.
4
ஆ, உமது மிகுந்தவேதனை சஞ்சலம்கண்ணீர் ஜெபம் சிந்துண்டமாசற்ற உம் ரத்தம்பாடுகள் சாவுக்காகவும்,கர்த்தாவே, உமக்கென்றும்துதி புகழ்ச்சியும்.
5
நீர் பட்ட மா அகோரப்பாடென்னை நித்தமேதுரிச்சையை விட்டோடஏவட்டும், இயேசுவேமா உயர்ந்த விலையால் நான்ரட்சிகப்பட்டேனென்றுநன்றாய் நினைக்கத்தான்
6
என் சிலுவையை நித்தம்வன் சொற்கள் யாவையும்தாங்கியே தெய்வ சித்தம்,ஆகட்டும் என்கவும்,வெறுத்து எல்லாம் உம்மையேபின் பற்றவும் பலத்தைஅளியும் கர்த்தரே
7
என் மேல் நீர் வைத்திருக்கும்அன்பாய் அடுத்தோனைநான் நேசித் தெவனுக்கும்தருஞ் சகாயத்தைஆகாத நோக்கம் மாயமும்இல்லாமல் மனமாரஇரங்கி செய்யவும்.
8
மாண்டால் உம்மிடம் வந்துஅனந்த ஆறுதல்உம்மால் அடைவேனென்றுநீர் பட்ட காயங்கள்பலமாய் என்னைத் தேற்றவும்நான் உம்மையே அன்பாகப்பிடித்தேன், ரட்சியும்.