பாமாலை · Hymn603
ஆ இயேசு உமது சிநேகம்
Ah Jesus, Whose great love
1
ஆ இயேசு, உமதுநேசத்துக்கொப்பிராது,விண்மண்ணிலுள்ளவர்துதிகட்கும் எட்டாது.நீர் மனு ஜென்மத்தைஎடுத்தென் சாபத்தைசுமந்து கொண்டதுமட்டற்ற கிருபை.
2
நீர் பெற்ற நாமமேஉயர்ந்ததாயிருக்கும்;அதென் வியாகுலம்அனைத்தையும் எடுக்கும்நீர் இயேசு என்றதாய்அழைக்கப்பட்டதுமா இன்பம், அதனால்என் துக்கம் நீங்கிற்று.
3
அன்புள்ள இயேசுவேநீர் எனது களிப்புநீர் கொண்ட நாமமேஅனைத்திலும் தித்திப்பு,நான் துயரப்படேன்;ஏன், இயேசு என்பவர்சொற்பொருளின்படிபலத்த ரட்சகர்.
4
பேய் எந்தன் மனதைதன் தீவினைகளாலேகலைக்கப் பார்க்கையில்,இம்மேன்மை நாமத்தாலேதிரும்ப ஆறுதல்வெளிச்சம் ஞானமும்உண்டாக, சகலஇருளும் போய்விடும்.
5
என் மீறுதல்களால்நான் தீயன், குற்றவாளிநீர் இயேசு ஆகையால்நான் மோட்ச்சத்தின் பங்காளி,என் பாவக் குற்றத்தைநிவர்த்தி பண்ணினீர்,பிதாவின் தயவைஎன் மேலே வைக்கிறீர்.
6
என் பாவத்தீட்பை நீர்பரிகரிப்பீராக.அசுத்தனான நான்மாசற்றுப் போவேனாகஉம்மால் என் சாபமும்என் குஷ்ட ரோகமும்போய், ஆசீர்வாதமும்சுகமும் காணவும்.