பாமாலை · Hymn608

இயேசுவே என் ஜீவனே

Jesus Light of light to me

Projector

Lyrics

1
இயேசுவே என் ஜீவனேஎன் கதியுமானநித்ய நல்வெளிச்சமேநீசப் பாவியானநான் நீர் பட்ட வாதையைநோக்கிக் கொண்டு சொல்லும்தாழ்மைத் தோத்திரங்களைஅன்பாய் ஏற்றுக் கொள்ளும்
2
கர்த்தரே நீர் மெத்தவும்பாடும் நோவுமானவேதனை அனைத்தையும்வெகு நிந்தையானசாவையும் அடைந்ததுஎன் பாவத்தால் தானேஅதற்கும்மை ஏவிற்றுபரிசுத்தவானே.
3
சுய மனசாட்சியில்குற்றவாளியாகத்தீர்க்கப்பட்டோன் உள்ளத்தில்ஆறுதலுண்டாக,நீரே தெய்வ அன்பினால்மீட்பராக் வந்தீர்எனக்காய் இரக்கத்தால்ஜீவனையுந் தந்தீர்.
4
தெய்வ அன்பின் ஆறுதல்எனக்கு நேராகவந்ததால் என் துக்கங்கள்மாறும்படியாகநீர் இரங்கி, யாவையும்எனக்கு மன்னியும்தேற்றரவும் பூரிப்பும்அதனால் அளியும்.
5
என் ஒன்றான நம்பிக்கை,இயேசுவே, நீர் தாமே,நீர் துக்கித்த பாவியைத்தேற்றுபவராமேஆகையால் என்னில் பயம்நீங்கி மோட்சம் வந்தும்,எனதாவி உம்மிடம்சேர்ந்தென்றைக்கும் தங்கும்.
6
நீர் அன்புள்ள் இயேசுவேஎன் கடைசி நாளில்என்னை உம்மிடத்திலேபரலோகமதில்சேர்த்துக் கொள்ளும் மட்டுக்கும்உம்மை நான் நன்றாகப்ப்ற்றிப் பின் வந்திடவும்பலம் ஈவீராக.
608 இயேசுவே என் ஜீவனே — Tamil Pamalai