பாமாலை · Hymn606
1
பெரிய வாதைகளையேபொறுமையாய் சகித்தீர்,தேவாட்டுக்குட்டி இயேசுவே,நோவில் அமைதி காத்தீர்,என் பாடுகளில் என்னையும்பொறுமையாக்கியருளும்.
2
மா துன்பத்தில் நீ கூடவா,நீ சிலுவையின் கீழேஅடங்கி நின்று, என் பின் வாமகிழ்ந்திரு என்றீரே;ஆ, நானும் ஆட்டுக்குட்டியைப்போல் சாந்தமானால் மா நன்மை.
3
உம்மோடே சிலுவையிலேஅறையப்பட்டு சாகநான் ஆசையாயிருப்பேனே;என் நெஞ்சில் அதற்காகஓர் ஆட்டுக்குட்டியின் குணம்உண்டாயிருந்தால் மா பாக்கியம்.
4
என்மேல் கொடூரம் நிந்தையும்அடிகளும் விழட்டும்எல்லா இக்கட்டும் ஆபத்தும்உபாதியும் வரட்டும்.வந்தும் ஓர் ஆட்டுக்குட்டிக்கேநான் ஒப்பாகட்டும் இயேசுவே.
5
பரத்துக்குப் போவோருக்குமகா துன்பமுண்டாமே.நீர் மகிமைக்குப் போனதுஅதே வழியுமாமே;யார் உம்மைப் போல் சகிக்கானோ,உம்மோடே வாழக்கூடுமோ.