பாமாலை · Hymn609

நீர் அநாதி நேசத்தாலே

Lord in love without beginning

Projector

Lyrics

1
நீர் அநாதி நேசத்தாலேஇயேசுவே என் அநீதம்யாவையும் சுமந்ததாலேஉமக்கென்றும் தோத்திரம்தேவரீர் அடியேனைமீட்கும் சிலுவையண்டைமுழங்காலில் நான் தரிக்கும்போதென் இதயம் களிக்கும்.
2
காயத்தால் அதிகமாகரத்தம் ஓடும் பாதத்தைமுத்தமிட்டுக் கெட்டியாகப்பற்றுதலே என் வாஞ்சைதேவரீர் என் பேரிலும்வைத்த வேட்பும் தாகமும்மனிதர் புத்திக் கெட்டாது,அதற்கெங்கும் ஒப்பிராது.
3
ஆதாம் ஏவாள் வருவித்தகேட்டையும், நான் தினமும்திரளாக நடப்பித்தஎல்லாக் கேடுகளையும்நீக்கும் பரிகாரியே,தேவரீரின் ரத்தமேநோவு யாவிலுமிருந்துமீட்கும் உத்தம மருந்து
4
இயேசுவே, நீர் எனக்காகப்பட்ட வெகு காயத்தைஎக்கணமும் பக்தியாகநான் நினைக்க நீர் அதைஎனக்குள் வரையவும்நீர் என் பங்கும் நன்மையும்என்றும் உம்மிடம் தரிப்பேன்,தெய்வ நேசத்தை ருசிப்பேன்.
5
திருப்பாதத்தில் விழுந்துநன்றாய்ப் பற்றிக் கொள்ளுவேன்சிலுவையிலேயிருந்துஎன்னை அன்பாய்ப் பாருமேன்,கேளும் என் விண்ணப்பத்தைஉன் ஏராள பாவத்தைநான் மன்னித்தேன்’ என்றுரையும்என் சலிப்பெல்லாம் மறையும்.
609 நீர் அநாதி நேசத்தாலே — Tamil Pamalai