பாமாலை · Hymn611

நாம் செய்த கன பாவத்தால்

In death's strong grasp

Projector

Lyrics

1
நாம் செய்த கன பாவத்தால்கொடூர சாவின் கட்டில்விழுந்த கிறிஸ்து மூன்றாம் நாள்எழுந்து நம்மிடத்தில்கொண்டு வந்தார் ஜீவனை;மகிழ்ந்தெல்லாரும் அவரைத்துதித்துத் தோத்திரிப்போம்.அல்லேலூயா.
2
புவியில் சாவு யாராலும்விமோசனமாகாது.ஏன் பாவத்தாலே முழுதும்நாம் கெட்டோம் சீர் காணாது.பாவம் நம்மை சாவுக்குஇரையாய் ஒப்புவித்தது;கிறிஸ்தோ பலத்த மீட்பர்அல்லேலூயா.
3
ஒன்றான தேவ புத்திரன்நம்மையே மீட்போமென்றுமரித்துயிர்த்து, நம்முடன்இருந்த சாவை வென்று,அதை ஞாயந் தீர்த்தாரே.சாவிப்போ வெறும் வேஷமேபேய் நம்மைக் கொல்லலாகாதேஅல்லேலூயா.
4
உயிரும் சாவும் பண்ணினபோர் எங்குங் கண்டதில்லைஅநீதியாய் எய்யுண்கின்றஉயிரே சாவின் வில்லைதெய்வ வல்லமையினால்அழித்துப் போட்டதாகையால்இனி நாம் சாவுக்கஞ்சோம்.அல்லேலூயா.
5
மகிழ்வோம் நாம், இவ்வுன்னதபஷாவின் நாள் இன்றாமேஉதித்தருள் நிரம்பியபகலோன் கர்த்தர் தாமேஒளி உண்டு பண்ணினார்,மனம் வெளுக்க செய்கின்றார்கழிந்ததே ராக்காலம்அல்லேலூயா.
611 நாம் செய்த கன பாவத்தால் — Tamil Pamalai