பாமாலை · Hymn625

சபையைக் கிறிஸ்து

When Christ is with His Church

Projector

Lyrics

1
சபையைக் கிறிஸ்து காக்கையில்சீறட்டும் பேய்கள் திரள்;பிதாவின் வலப் பக்கத்தில்உயர்ந்தவரின் விரல்நரகின் பேரிலும்ஆளுகை செய்யும்;சபைக்கோ அவர்சமீபமானவர்;மா பலமாய் ரட்சிப்பார்.
2
ராஜாக்கள் ஆண்டவருக்கும்பட்டாபிஷேகம் பெற்றதெய்வீக மைந்தன் அவர்க்கும்விரோதமாக மெத்தவீம்பாய்க் கலகத்தைசெய்து அவரைக்கேலி பண்ணியும்,மாற்றார் எல்லாரையும்பராபரன் நகைப்பார்.
3
ஆகாதோர் தெய்வ வார்த்தையைப்பகைத்து நிந்திப்பார்கள்;ஆனாலும் நம்மை விட்டதைப்பறிக்கவே மாட்டார்கள்.நாம் விசுவாசித்து,அவர் சொல்லுக்குக்கீழடங்கினால்நம்மைத் தம் கையினால்நடத்தி மோட்சஞ் சேர்ப்பார்.
4
கிறிஸ்தோரே, பேயும் லோகமும்பயமுறுத்தினாலும்,அஞ்சாதிருங்கள், விண்ணிலும்மண்ணுலகிலும் ஆளும்மகா தயாபரர்துணை நிற்பவர்,பலம் திடனும்,இக்கட்டில் சாவிலும்ஜெயம் அளித்துக் காப்பார்.
625 சபையைக் கிறிஸ்து — Tamil Pamalai